Wednesday, September 18, 2019

மஸ்ஜிது நிருவாகிகள் சிலர் ஆலிம்களோடு பகைமை கொள்வதேன்?

🔰 *கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிருவாகப் பெருமக்களுக்கு...*

💠 தங்களது மஸ்ஜிதில் சேவையாற்றுகிற *"இமாம் பெருந்தகை"* என்பவர்
ஒரு தாயை,
ஒரு தந்தையை, மனைவியை,
தமது பிள்ளைகளை, தம்மை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளை அரவணைத்துக் காப்பாற்றுகிற மாபெரும் பொறுப்புக் கடமையில் உள்ளவர்தான்!!

இவைகள் அனைத்தையும் தாண்டி தாம் ஏற்றுக்கொண்ட இமாமத் பொறுப்பு என்பதின் அடிப்படையில் மஹல்லாப் பெருமக்களது அனைத்துவிதமான நன்மைகளுக்கும் வழிகாட்டுகிற,
அனைத்துவிதமான தீமைகளிலிருந்தும் தடுத்துப் பாதுகாக்கின்ற மாபெரும் பொது நல பொறுப்புக் கடமையும் கொண்டவராவார்!

*எனவே அவருக்குப் பல்வேறு பொருளாதத் தேவைகளுண்டு என்தையும்-,*
*பல குடும்பக் கவலைகளும் நிரம்ப உண்டு என்பதையும் எவரும் மறுக்க மறைக்கவியலாது.*

💠 இவ்வாறான சூழலில் தங்களது மஸ்ஜிதில் இமாமாக சேவை செய்திடும் ஆலிம் பெருந்தகைக்கு மாதந்தோரும் வழங்கப்படுகிற ஹதியா ஐந்தாயிரத்திலிருந்து துவங்கி பத்து அல்லது பதினைந்தாயிரம் என்பதோடு முற்றுப்பெறுகிறது!

இவ்வாறான நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் எவ்வளவு செலவுகள் உண்டு என்பது நாமறியாததல்ல!

💠 சில மஸ்ஜிதுகளின் நிருவாகிகள் இமாம்களுக்குறிய மரியாதையை வழங்கிடாமல்...

🔹 *எங்க பள்ளி இமாம் மோசமானவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் சரியில்லாதவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் பணத்தாசை பிடித்தவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் சட்டை போடுறவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் இமாமத் செய்யத் தகுதியில்லாதவர்...*

என்று இழித்துப்பேசுவதுடன்...

*அந்த ஆலிமைக் காணும்போதெல்லாம் அவமரியாதை செய்கிற வண்ணமாக நடந்து கொள்ளும் கீழ்த்தரமான செயல்கள் ஏராளமுண்டு!*

💠 நிருவாகிகளால் எதற்காக அந்த ஆலிம் இவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் படுகிறார்..? இதன் பின்ணனிதான் என்ன..? என்று நாம் ஆய்வு செய்தால்...

🔹 *சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட சில நிருவாகிகளின் மார்க்க ரீதியான செயல்பாடுகளை ஆமோதிக்காதவராக செயல்பட்டிருப்பார்-,*

🔹 *அல்லது, தொழுகையை தொழவைத்து முடிந்தவுடன் எழும்பிச் சென்று விடுபவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது அடிக்கடி லீவு எடுத்துக்கொள்பவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் அந்த நொடிப்பொழுது பள்ளிக்குள் நுழைபவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது மார்க்கத்துக்கு முரண்பட்ட விசயங்களை மஹல்லா மக்கள் செய்கிறபோது அதைக்கண்டித்து பயான் செய்கிறவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது, நிருவாகத்திற்குப் பிடிக்காத சிலபேர்களுடன்...*

*தாம் ஒரு பொது மனிதர் என்ற அடிப்படையிலும்-,*

*ஆலிம் என்ற அழியாச் செல்வமுடையவர் என்ற கோட்பாட்டின் பிரகாரமும் பல்வேறு மக்களுடன் அன்பொழுகப் பழகக்கூடியவராக இருந்திருப்பார்...-,*

💠 இவ்வாறு சில பல செயல்பாடுகளுக்காகத்தான் ஆலிம்களை நிருவாகப் பெருமக்கள் மதிப்பதில்லை என்பதை நாமறிகிறோம்.

💠 எப்பிழையாக இருப்பினும், நிருவாகப் பெருமக்கள் சம்பந்தப்பட்ட ஆலிமிடம் கண்ணியமான அணுகு முறையுடன் விசயங்களை அன்பாக எடுத்துச் சொல்லும்போது நிச்சயமாக அதை அவர் ஏற்றுக்கொள்வார்!

💠 இவ்வாறான அன்பு வழிகளை விட்டு விட்டு பள்ளிவாசல்களின் முதலாளிகள் போன்று சில நிருவாகிகள் நடந்து கொண்டு...

இமாம் என்பவரை *சம்ளம் பெறுகிற ஒரு வேலைக்காரன்* என்று எண்ணிக்கொண்டு அதிகாரத்தின் உச்சத்திற்குச் சென்று-,

பலபேர்கள் பார்க்கும் வண்ணம்....

🔹 *ஹஜ்ரத்... நீங்க செய்யறது சரியில்ல...*

🔹 *லேட்டா வர்ரீங்க*
🔹 *லீவு போடுறீங்க*
🔹 *அவன்கூட பேசுறீங்க*
🔹 *சட்டை போடுறீங்க*
🔹 *நாங்க செய்யுற தவறுகளை பயான்ல சொல்றீங்க*
🔹 *நிருவாகத்தை மதிக்கமாட்டேங்கிறீங்க*
🔹 *இனிமே இப்படி நீங்க செஞ்சீங்கன்னா சீட்டை கிழிச்சுடுவோம்*

என்ற அடக்குமுறை வார்த்தைகளை ஆலிமின்மீது அள்ளியெறிகின்றனர்.

💠 இவ்வாறான வார்த்தைகளை செவிமடுக்கும் யாவருக்கும் மன வருத்தம் கலந்த கோபம் வருவது இயல்புதானே....

💠 கோபம் ஏற்பட்டு சில வார்த்தைகளை ஆலிம் நியாயத்துடன் பேசிவிட்டால்...

🔹 *நிருவாகத்தை எதிர்த்து பேசிட்டார்...*
என்ற குற்றச்சாட்டை ஆலிமின் தலைமீது சுமத்தி விடுகின்றனர்!

💠 *கண்ணியமிகு நிருவாகப் பெருமக்களே...!*

💠 *மனிதர்களிடம் பிழையிருக்கலாம்...*
என்ற வரிசையில் ஆலிமும் மனிதர்தானே... மலக்கல்லவே!

💠 அவ்வாறிருக்கும்போது அவரது கண்ணியம் கருதி தாங்கள் நடந்திடும்போது
அந்த ஆலிம் தம்மைத் திருத்திக்கொள்ள நிச்சயமாக முனைவார்!

💠 அல்லது
நீங்கள் அவரிடம் பல்வேறு முறைகளில்,

பல்வேறு வழிகளில்,

பல்வேறு விவேகங்களைக் கடைபிடித்துப் பேசியும் அவர் மார்க்கத்திற்கும் தமக்கும் இறைபாதிப்பை ஏற்படுத்துகிற செயலைச்செய்தால்...

அவரை வைத்திருப்பதும் நீக்குவதும் உங்களது விருப்பத்திலுள்ளது!

🔰 *இவை தவிர நிருவாகப் பெருமக்கள் இமாம் விசயத்தில் எடுக்கும் முடிவு என்பது நீதியானதாகவும்*
*இறைப் பொருத்தத்தைப் பெற்றுத்தர* *வல்லதாகவும் இருந்திட வேண்டும்.,*

இவையல்லாமல்...
*இமாமினுடைய நியாயமான மனவருத்தத்தையோ,*
*இறைவனது கோபப்பார்வைகளையோ*
*பெற்றுத்ருகிற ரீதியில் நிருவாகத்தின் முடிவு ஒருபோதும் ஒருக்ஷணப்பொழுதேனும் அமைந்திடக்கூடாது* என்பதில் நிருவாகப் பெருமக்கள் முழுமையான கவனத்துடன் செயல்படவேண்டும்.

🔹துஆவுடன்...
🔰 *மௌலவி*
*அப்துர் ரஹ்மான் ரஹ்மானி*
02-05-2019
+91 9840888466

No comments:

Post a Comment

மஸ்ஜிது நிருவாகிகள் சிலர் ஆலிம்களோடு பகைமை கொள்வதேன்?

🔰 *கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிருவாகப் பெருமக்களுக்கு...* 💠 தங்களது மஸ்ஜிதில் சேவையாற்றுகிற *"இமாம் பெருந்தகை...