Wednesday, September 18, 2019

ஆலிம்களின் கண்ணியம் காப்பாற்றப்படுமா?

🔰 *கண்ணியமிகு ஆலிம்களே..!*

*ஜமாஅத்துல் உலமாப் பேரவையின் அங்கத்தினர்களே..!!*

*தமிழகத்தில் சேவையாற்றுகிற ஆலிம்களில் பலர்-*,

*மஸ்ஜிதின் நிருவாகிகளாலும் சில மதரஸாக்களின் நிருவாகிகளாலும் தகுந்த காரணங்களில்லாமல் பணி நீக்கம் செய்யப்படுவது பற்றி மாவட்ட, மாநில ஜமாஅத்துல் உலமாவின் கண்ணியமிகு நிருவாகப் பெருமக்கள் தொடர் மௌனம் காப்பது ஹுதைபிய்யா உடன்படிக்கையை நினைவூட்டுகிறது..!*

🔰 *வல்ல அல்லாஹ்வின் பேரருளால் மாநில ஜமாஅத்துல் உலமாப் பேரவையானது-, "வருமுன் பாதுகாப்போம்" என்ற வழியில் நின்று அரசியல் விவகாரங்களைக் கையிலெடுத்துக் களப்பணியாற்றுவது போன்று...*

*...ஆலிம்களது கண்ணியம் மற்றும் மரியாதை விசயத்திலும் ஆழிய கவனம் செலுத்திட வேண்டும்!*

🔰 *ஆலிம்களுடைய மரியாதைக்கு குந்தகத்தை ஏற்படுத்துகிற, சர்வாதிகார போக்குடைய சில நிருவாகிகளுக்கு நல்லுணர்வைப் புகட்டுவதுடன்-, இனிமேல் எக்காலமும் ஆலிம்களை கிள்ளு கீரைகளாக நினைந்திடக்கூடாது என்ற பாடத்தை உரக்க நடத்திட வேண்டும்!*

🔰 *இன்னும் பல்வேறு பகுதிகளில் ஒர் ஆலிம் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதற்கு சில ஆலிம்கள் காரணமாகவுள்ளனர் என்பதையும் மறுக்கவியலாது!*

🔰 *சில மஸ்ஜித் நிருவாகிகளிடம் தமது சாலக்குப் பேச்சுக்களால் அவர்களைத் தமதாக்கிக் கொண்டு குறிப்பிட்ட மஸ்ஜிதில் இமாமத் சேவை செய்யும் ஆலிமுக்குப் பின்னால் ரெண்டக வேலைகளைச் செய்யத்தூண்டுகிற "செகண்ட் தமிழ் பிஹாரி ஆலிம்"களும் இருக்கின்றனர்.*

🔰 *தமது கொள்கை உடைய ஆலிம்களே இப்பகுதி முழுவதும் வரவேண்டுமென்ற தீண்டாமை சிந்தனை கொண்டவர்களும் உள்ளனர்.*

🔰 *இதற்காக சில ஹாஜி"யார்"களை தமது உள்ளங்கையில் திணித்துக்கொண்டு சக ஆலிம்களிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு...*
*"எனது பேச்சுக்கு உங்க பள்ளி நிருவாகிக் கட்டுப்படுவார்"*
*என்ற மறைமுக சுங்கவரித்தன செயலைக் கட்டவிழ்த்து விடுகிற ஆலிம்களுமுண்டு!*

🔰 *ஆகையால் இதுபோன்ற களைகளும் கறைகளும் நிரம்பப் படிந்துள்ள இவ்வேளையில்-, மாநில ஜமாஅத்துல் உலமாப் பேரவையானது போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கொண்டு வரவேண்டும்!*

🔰 *மாநில ஜமாஅத்துல் உலமாப் பேரவை பாதிக்கப்பட்ட ஆலிம்களுக்காக வேண்டி இதுவரை செய்த பாதுகாப்புக் குறித்த நடவடிக்கைகளை பிற ஆலிம்கள் அறிந்திடும் பொருட்டு பதிவிடவேண்டும்!*

❇ மௌலவி
அப்துர் ரஹ்மான் ரஹ்மானி
27-10-1440 / 01-07-2019
நேரம் காலை 11:31

No comments:

Post a Comment

மஸ்ஜிது நிருவாகிகள் சிலர் ஆலிம்களோடு பகைமை கொள்வதேன்?

🔰 *கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிருவாகப் பெருமக்களுக்கு...* 💠 தங்களது மஸ்ஜிதில் சேவையாற்றுகிற *"இமாம் பெருந்தகை...