Wednesday, September 18, 2019

மஸ்ஜிது நிருவாகிகள் சிலர் ஆலிம்களோடு பகைமை கொள்வதேன்?

🔰 *கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிருவாகப் பெருமக்களுக்கு...*

💠 தங்களது மஸ்ஜிதில் சேவையாற்றுகிற *"இமாம் பெருந்தகை"* என்பவர்
ஒரு தாயை,
ஒரு தந்தையை, மனைவியை,
தமது பிள்ளைகளை, தம்மை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளை அரவணைத்துக் காப்பாற்றுகிற மாபெரும் பொறுப்புக் கடமையில் உள்ளவர்தான்!!

இவைகள் அனைத்தையும் தாண்டி தாம் ஏற்றுக்கொண்ட இமாமத் பொறுப்பு என்பதின் அடிப்படையில் மஹல்லாப் பெருமக்களது அனைத்துவிதமான நன்மைகளுக்கும் வழிகாட்டுகிற,
அனைத்துவிதமான தீமைகளிலிருந்தும் தடுத்துப் பாதுகாக்கின்ற மாபெரும் பொது நல பொறுப்புக் கடமையும் கொண்டவராவார்!

*எனவே அவருக்குப் பல்வேறு பொருளாதத் தேவைகளுண்டு என்தையும்-,*
*பல குடும்பக் கவலைகளும் நிரம்ப உண்டு என்பதையும் எவரும் மறுக்க மறைக்கவியலாது.*

💠 இவ்வாறான சூழலில் தங்களது மஸ்ஜிதில் இமாமாக சேவை செய்திடும் ஆலிம் பெருந்தகைக்கு மாதந்தோரும் வழங்கப்படுகிற ஹதியா ஐந்தாயிரத்திலிருந்து துவங்கி பத்து அல்லது பதினைந்தாயிரம் என்பதோடு முற்றுப்பெறுகிறது!

இவ்வாறான நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் எவ்வளவு செலவுகள் உண்டு என்பது நாமறியாததல்ல!

💠 சில மஸ்ஜிதுகளின் நிருவாகிகள் இமாம்களுக்குறிய மரியாதையை வழங்கிடாமல்...

🔹 *எங்க பள்ளி இமாம் மோசமானவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் சரியில்லாதவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் பணத்தாசை பிடித்தவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் சட்டை போடுறவர்...*

🔹 *எங்க பள்ளி இமாம் இமாமத் செய்யத் தகுதியில்லாதவர்...*

என்று இழித்துப்பேசுவதுடன்...

*அந்த ஆலிமைக் காணும்போதெல்லாம் அவமரியாதை செய்கிற வண்ணமாக நடந்து கொள்ளும் கீழ்த்தரமான செயல்கள் ஏராளமுண்டு!*

💠 நிருவாகிகளால் எதற்காக அந்த ஆலிம் இவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் படுகிறார்..? இதன் பின்ணனிதான் என்ன..? என்று நாம் ஆய்வு செய்தால்...

🔹 *சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட சில நிருவாகிகளின் மார்க்க ரீதியான செயல்பாடுகளை ஆமோதிக்காதவராக செயல்பட்டிருப்பார்-,*

🔹 *அல்லது, தொழுகையை தொழவைத்து முடிந்தவுடன் எழும்பிச் சென்று விடுபவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது அடிக்கடி லீவு எடுத்துக்கொள்பவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் அந்த நொடிப்பொழுது பள்ளிக்குள் நுழைபவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது மார்க்கத்துக்கு முரண்பட்ட விசயங்களை மஹல்லா மக்கள் செய்கிறபோது அதைக்கண்டித்து பயான் செய்கிறவராக இருந்திருப்பார்...-,*

🔹 *அல்லது, நிருவாகத்திற்குப் பிடிக்காத சிலபேர்களுடன்...*

*தாம் ஒரு பொது மனிதர் என்ற அடிப்படையிலும்-,*

*ஆலிம் என்ற அழியாச் செல்வமுடையவர் என்ற கோட்பாட்டின் பிரகாரமும் பல்வேறு மக்களுடன் அன்பொழுகப் பழகக்கூடியவராக இருந்திருப்பார்...-,*

💠 இவ்வாறு சில பல செயல்பாடுகளுக்காகத்தான் ஆலிம்களை நிருவாகப் பெருமக்கள் மதிப்பதில்லை என்பதை நாமறிகிறோம்.

💠 எப்பிழையாக இருப்பினும், நிருவாகப் பெருமக்கள் சம்பந்தப்பட்ட ஆலிமிடம் கண்ணியமான அணுகு முறையுடன் விசயங்களை அன்பாக எடுத்துச் சொல்லும்போது நிச்சயமாக அதை அவர் ஏற்றுக்கொள்வார்!

💠 இவ்வாறான அன்பு வழிகளை விட்டு விட்டு பள்ளிவாசல்களின் முதலாளிகள் போன்று சில நிருவாகிகள் நடந்து கொண்டு...

இமாம் என்பவரை *சம்ளம் பெறுகிற ஒரு வேலைக்காரன்* என்று எண்ணிக்கொண்டு அதிகாரத்தின் உச்சத்திற்குச் சென்று-,

பலபேர்கள் பார்க்கும் வண்ணம்....

🔹 *ஹஜ்ரத்... நீங்க செய்யறது சரியில்ல...*

🔹 *லேட்டா வர்ரீங்க*
🔹 *லீவு போடுறீங்க*
🔹 *அவன்கூட பேசுறீங்க*
🔹 *சட்டை போடுறீங்க*
🔹 *நாங்க செய்யுற தவறுகளை பயான்ல சொல்றீங்க*
🔹 *நிருவாகத்தை மதிக்கமாட்டேங்கிறீங்க*
🔹 *இனிமே இப்படி நீங்க செஞ்சீங்கன்னா சீட்டை கிழிச்சுடுவோம்*

என்ற அடக்குமுறை வார்த்தைகளை ஆலிமின்மீது அள்ளியெறிகின்றனர்.

💠 இவ்வாறான வார்த்தைகளை செவிமடுக்கும் யாவருக்கும் மன வருத்தம் கலந்த கோபம் வருவது இயல்புதானே....

💠 கோபம் ஏற்பட்டு சில வார்த்தைகளை ஆலிம் நியாயத்துடன் பேசிவிட்டால்...

🔹 *நிருவாகத்தை எதிர்த்து பேசிட்டார்...*
என்ற குற்றச்சாட்டை ஆலிமின் தலைமீது சுமத்தி விடுகின்றனர்!

💠 *கண்ணியமிகு நிருவாகப் பெருமக்களே...!*

💠 *மனிதர்களிடம் பிழையிருக்கலாம்...*
என்ற வரிசையில் ஆலிமும் மனிதர்தானே... மலக்கல்லவே!

💠 அவ்வாறிருக்கும்போது அவரது கண்ணியம் கருதி தாங்கள் நடந்திடும்போது
அந்த ஆலிம் தம்மைத் திருத்திக்கொள்ள நிச்சயமாக முனைவார்!

💠 அல்லது
நீங்கள் அவரிடம் பல்வேறு முறைகளில்,

பல்வேறு வழிகளில்,

பல்வேறு விவேகங்களைக் கடைபிடித்துப் பேசியும் அவர் மார்க்கத்திற்கும் தமக்கும் இறைபாதிப்பை ஏற்படுத்துகிற செயலைச்செய்தால்...

அவரை வைத்திருப்பதும் நீக்குவதும் உங்களது விருப்பத்திலுள்ளது!

🔰 *இவை தவிர நிருவாகப் பெருமக்கள் இமாம் விசயத்தில் எடுக்கும் முடிவு என்பது நீதியானதாகவும்*
*இறைப் பொருத்தத்தைப் பெற்றுத்தர* *வல்லதாகவும் இருந்திட வேண்டும்.,*

இவையல்லாமல்...
*இமாமினுடைய நியாயமான மனவருத்தத்தையோ,*
*இறைவனது கோபப்பார்வைகளையோ*
*பெற்றுத்ருகிற ரீதியில் நிருவாகத்தின் முடிவு ஒருபோதும் ஒருக்ஷணப்பொழுதேனும் அமைந்திடக்கூடாது* என்பதில் நிருவாகப் பெருமக்கள் முழுமையான கவனத்துடன் செயல்படவேண்டும்.

🔹துஆவுடன்...
🔰 *மௌலவி*
*அப்துர் ரஹ்மான் ரஹ்மானி*
02-05-2019
+91 9840888466

ஆலிம்களின் கண்ணியம் காப்பாற்றப்படுமா?

🔰 *கண்ணியமிகு ஆலிம்களே..!*

*ஜமாஅத்துல் உலமாப் பேரவையின் அங்கத்தினர்களே..!!*

*தமிழகத்தில் சேவையாற்றுகிற ஆலிம்களில் பலர்-*,

*மஸ்ஜிதின் நிருவாகிகளாலும் சில மதரஸாக்களின் நிருவாகிகளாலும் தகுந்த காரணங்களில்லாமல் பணி நீக்கம் செய்யப்படுவது பற்றி மாவட்ட, மாநில ஜமாஅத்துல் உலமாவின் கண்ணியமிகு நிருவாகப் பெருமக்கள் தொடர் மௌனம் காப்பது ஹுதைபிய்யா உடன்படிக்கையை நினைவூட்டுகிறது..!*

🔰 *வல்ல அல்லாஹ்வின் பேரருளால் மாநில ஜமாஅத்துல் உலமாப் பேரவையானது-, "வருமுன் பாதுகாப்போம்" என்ற வழியில் நின்று அரசியல் விவகாரங்களைக் கையிலெடுத்துக் களப்பணியாற்றுவது போன்று...*

*...ஆலிம்களது கண்ணியம் மற்றும் மரியாதை விசயத்திலும் ஆழிய கவனம் செலுத்திட வேண்டும்!*

🔰 *ஆலிம்களுடைய மரியாதைக்கு குந்தகத்தை ஏற்படுத்துகிற, சர்வாதிகார போக்குடைய சில நிருவாகிகளுக்கு நல்லுணர்வைப் புகட்டுவதுடன்-, இனிமேல் எக்காலமும் ஆலிம்களை கிள்ளு கீரைகளாக நினைந்திடக்கூடாது என்ற பாடத்தை உரக்க நடத்திட வேண்டும்!*

🔰 *இன்னும் பல்வேறு பகுதிகளில் ஒர் ஆலிம் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதற்கு சில ஆலிம்கள் காரணமாகவுள்ளனர் என்பதையும் மறுக்கவியலாது!*

🔰 *சில மஸ்ஜித் நிருவாகிகளிடம் தமது சாலக்குப் பேச்சுக்களால் அவர்களைத் தமதாக்கிக் கொண்டு குறிப்பிட்ட மஸ்ஜிதில் இமாமத் சேவை செய்யும் ஆலிமுக்குப் பின்னால் ரெண்டக வேலைகளைச் செய்யத்தூண்டுகிற "செகண்ட் தமிழ் பிஹாரி ஆலிம்"களும் இருக்கின்றனர்.*

🔰 *தமது கொள்கை உடைய ஆலிம்களே இப்பகுதி முழுவதும் வரவேண்டுமென்ற தீண்டாமை சிந்தனை கொண்டவர்களும் உள்ளனர்.*

🔰 *இதற்காக சில ஹாஜி"யார்"களை தமது உள்ளங்கையில் திணித்துக்கொண்டு சக ஆலிம்களிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு...*
*"எனது பேச்சுக்கு உங்க பள்ளி நிருவாகிக் கட்டுப்படுவார்"*
*என்ற மறைமுக சுங்கவரித்தன செயலைக் கட்டவிழ்த்து விடுகிற ஆலிம்களுமுண்டு!*

🔰 *ஆகையால் இதுபோன்ற களைகளும் கறைகளும் நிரம்பப் படிந்துள்ள இவ்வேளையில்-, மாநில ஜமாஅத்துல் உலமாப் பேரவையானது போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கொண்டு வரவேண்டும்!*

🔰 *மாநில ஜமாஅத்துல் உலமாப் பேரவை பாதிக்கப்பட்ட ஆலிம்களுக்காக வேண்டி இதுவரை செய்த பாதுகாப்புக் குறித்த நடவடிக்கைகளை பிற ஆலிம்கள் அறிந்திடும் பொருட்டு பதிவிடவேண்டும்!*

❇ மௌலவி
அப்துர் ரஹ்மான் ரஹ்மானி
27-10-1440 / 01-07-2019
நேரம் காலை 11:31

Monday, September 16, 2019

பெண்பிள்ளைகள் ஓடிப்போவதற்கு என்ன காரணம்?

பெண்ணைப் பெற்ற ஈமானியப் பெற்றோரே..!

உங்கள் பெண்பிள்ளைகளை உங்களது கண்களைப் பாதுகாப்பதைவிட மிகக்கவனமாகப் பாதுகாத்திடுங்கள்!

"என் மகள் கல்லூரியில் பயிலுகிறாள்"
என்று பெருமை பீற்றுவதை விட்டு விட்டு
அவளைக் கண்காணித்து,- விரைவாக  நல்ல மணமகனுக்கு நிகாஹ் செய்து கொடுங்கள்!

எத்தனையோ வாலிபப் பெண்பிள்ளைகள் ஈமானைக் குழிதோண்டி புதைத்து விட்டு-,

ஆண்டாண்டு காலமாக பெற்று வளர்த்த பெற்றோர்களை கதறவிட்டு விட்டு-,

ஓடிச்சென்று எவனையோ திருமணம் செய்கிறேன் என்ற பெயரில் விபச்சார வாழ்வைத் தேடித்-தொலைக்கின்றனர்-.

குறுகிய காலத்தில் அவளை அவன் அனுபவித்துவிட்டு குப்பைகள் தூக்கியெறியப்படுகிற முட்புதரில் வீசிவிடுகிறான்!

நமது பெண்பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதுடன்-,
அவளது கையில் ஒரு சாணளவுக்கு ஆண்ட்ராய்டு மோபைலும்
தவறாது ரீசார்ஜும் பெற்றோர்களாகிய நீங்கள் செய்து கொடுத்தால்...

அவளை செயல் ரீதியாகவும் இன்னும் உடல் ரீதியாகவும் நீங்களே விபச்சாரியாக மாற்றிவிடுகிறீர்கள் என்றுதான் அதற்குப் பொருள்!

தவறுக்கான வாயிலைத்திறந்து விட்டுவிட்டு,
பின்பு மாபாதகச்செயல் நடந்த பின் உங்களது கூச்சலும் அழுகையும் ஒப்பாரியும் சல்லிக்காசுக்குக்கூட பலன்-தராது!

ஈமானை முற்படுத்தி வாழுங்கள்!
மானம் மரியாதை தாமாகத் தேடிவரும்!!

*மௌலவி*
*அப்துர் ரஹ்மான் ரஹ்மானி*
06-01-1441 / 7-09-2019

(மீள்பதிவு)

மஸ்ஜிது நிருவாகிகள் சிலர் ஆலிம்களோடு பகைமை கொள்வதேன்?

🔰 *கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிருவாகப் பெருமக்களுக்கு...* 💠 தங்களது மஸ்ஜிதில் சேவையாற்றுகிற *"இமாம் பெருந்தகை...